சேலம் சிவதாபுரம் பகுதியில் இருந்து வெட்டி எடுத்துச் செல்லப்படும் செங்கரும்பு. 
தமிழ்நாடு

சேலத்தில் செங்கரும்பு அறுவடை தீவிரம்!

சேலம் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அதிகளவிலான கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

DIN

சேலம்: சேலம் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அதிகளவிலான கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இனிக்கும் வகையில் செங்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த செங்கரும்பு தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவில் சேலம் மாவட்டத்தில்தான் அதிக அளவு பயிரிடப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படும் செங்கரும்புக்கு தற்போது அரசிடம் இருந்தும் வெளி சந்தைகளிலும் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாள்களிலே உள்ள நிலையில் வெளி மாவட்டங்களுக்கும் ரேஷன் கடைகளுக்கும் கரும்பை அறுவடை செய்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

சேலம் மாவட்டம் ஓமலூர், மேச்சேரி போன்ற பகுதிகளில் செங்குரும்பு அறுவடை செய்யப்பட்டு அதனை 25 கரும்புகள் கொண்ட கட்டுக்களாக கட்டப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு வருகிறது.

கரும்புக்கு தற்போது நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் கரும்பை அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த பணிகள் தற்போது அனைத்து இடங்களிலும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அது மட்டும் இல்லாதது, சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் கொண்டாட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து கரும்புக்கு கூடுதல் மவுசும் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் இதனால் எதிர்பார்த்த அளவுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாகவும் இனிப்பான பொங்கலை இந்த வருடம் விவசாயிகள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

2026 உலகக் கோப்பை: முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ தேர்வு!

SCROLL FOR NEXT