தமிழ்நாடு

சென்னையில் 2 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

திருவள்ளுவர் நாள், குடியரசு நாளை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் வரும் 16 மற்றும் 26 ஆம் தேதி என 2 நாள்கள் மூடப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

DIN


சென்னை: திருவள்ளுவர் நாள், குடியரசு நாளை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் வரும் 16 மற்றும் 26 ஆம் தேதி என 2 நாள்கள் மூடப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுவர் நாள் வருகிற 16 ஆம் தேதியும் (திங்கள்கிழமை), குடியரசு நாள் 26 ஆம் தேதியும் (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 2ஏ ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் வருகிற 16 மற்றும் 26 ஆகிய 2 நாள்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். 

அதேபோல், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்களும், இதர பார்களும் என அனைத்தும் கண்டிப்பாக மூடி இருக்க வேண்டும் என்றும், இந்த 2 நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

SCROLL FOR NEXT