தமிழ்நாடு

சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயன் இல்லை: கே.அண்ணாமலை

DIN

சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயன் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயன் இல்லை. மத்திய அரசுடன் இணைந்து புதியதாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் பாஜக ஆதரிக்கும். இத்திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது.

ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12% வருமானம் தர வேண்டும். சேதுசமுத்திர திட்டத்தால் வருமானம் இருக்காது. சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வந்தால் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம் தரும். திமுக எம்பி-கள் கனிமொழி, பாலு நடத்தும் நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் பெரும். 

அரசியல் காரணத்திற்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக முதல்வர் கூறுவது தவறானது. இத்திட்டம் தொடர்பாக பாஜகவின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும். பேரவையில் கொண்டுவரப்பட்ட சேது சமுத்திரத் திட்ட தீர்மானத்தில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. 

காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீ கொலையா? தற்கொலையா? என்பதை சொல்லிவிடுவேன். புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT