கோப்புப் படம். 
தமிழ்நாடு

சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 சனிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் செயல்பாட்டிலிருந்து விலக்கு அளித்தும், தைப்பூசம் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நிகழ உள்ள நிலையில் அன்றைய தினம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கு விலக்களித்தும் உத்திரவிடுமாறு  தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, மேற்கூறிய 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 (சனிக்கிழமை)  அன்று செயல்படுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. 

மேலும் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தைப்பூசத்தை முன்னிட்டு இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கும் விலக்களிக்கப்படுகிறது. இவ்விரண்டு தினங்களைத் தவிர இனிவரும் சனிக்கிழமைகளில் மேற்சொன்ன 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

SCROLL FOR NEXT