தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்! 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

DIN


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிமை (ஜன.15) பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் எல்லாம் புதுமை; எதிலும் புதுமை பொங்கும் விதமாக புத்தாடை அணிந்து, வீடுகளில் வண்ண கோலமிட்டு, செம்மண் தீட்டிய தம் இல்லத்தின் வாசலில் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி வைத்து புதிய பொங்கல் பானைக்கு புதிய மஞ்சளை கொம்பு செடியை புதிய நூலில் காப்பாக கட்டி, குங்குமம் வைத்து, மங்களகரமாக புதிய நெல் குத்தியெடுத்த புத்தரிசியில் பொங்கலிட்டு கதிரவனை வழிபட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது குடும்பத்துடன் "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என கூறி ஆரவாரித்து மகிழ்ச்சி அடைந்தனர். 

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT