பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய தமிழரசனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது.
பாலமேட்டில் 9 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 860 மாடிகள் அவிழ்த்து விடப்பட்டது. 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார்.
சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த தமிழரசனுக்கு முதல்வர் சார்பில் அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார்.
இதையும் படிக்க: நெட்பிளிக்ஸ் 2023இல் வெளியாக உள்ள 18 தமிழ்ப் படங்கள்!
19 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பெற்ற பாலமேட்டைச் சேர்ந்த மணிகண்டனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.