தமிழ்நாடு

அனுமதியின்றி ஆத்தூரில் ரேக்ளா போட்டி!

ஆத்தூர் உடையார்பாளையத்தில் பொங்கல் விழா கழகத்தின் சார்பில் வருடந்தோறும் ரேக்ளா குதிரைப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

DIN


ஆத்தூர்: ஆத்தூர் உடையார்பாளையத்தில் பொங்கல் விழா கழகத்தின் சார்பில் வருடந்தோறும் ரேக்ளா குதிரைப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இதனையடுத்து இன்று ரேக்ளா போட்டி நடத்துவதற்காக உடையார்பாளையம் பொங்கல் விழா கழகத்தின் சார்பாக அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதனால் இன்று சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமையில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.

இந்த ரேக்ளா போட்டியில் 17 சிறிய குதிரைகள் கலந்து கொண்டன. மேலும் ஆத்தூர் உடையார்பாளையத்திலிருந்து கொத்தம்பாடி வரை 17 குதிரைகள் சென்றன.

ஆனால், இந்த 17 குதிரைகள் அருகே 500 பைக்கில் மொத்தம் ஆயிரம் பேர் முந்திக்கொண்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் பார்க்க முடியாமல் தவித்தனர். மேலும் குதிரையை முந்தி செல்லவிடாமல் பைக்கில் செல்லும் இளைஞர்கள் தடுத்ததால் குதிரை ஓட்டும் ரேக்ளா  வீரர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

ரேக்ளா ரேஸா இல்லை பைக் ரேஸா என்ற அளவுக்கு நிலைமை இருந்ததாக என்று  சமூக ஆர்வலர் மிகவும் கவலை தெரிவித்துள்ளனர். ரேக்ளா போட்டியில் குதிரைகள் ஓட்டுவதற்காக மட்டுமே அனுமதி தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இன்று நடைபெற்ற சிறிய குதிரைக்கான ரேக்ளா போட்டியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நவீன் பிரதாப் முதல் பரிசும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த குதிரை இரண்டாம் பரிசும், திருச்சியை சேர்ந்த சாந்தி கருப்பன் மூன்றாம் பரிசு, அம்மாபேட்டை ரத்தின வேல் நான்காம் பரிசும் பெற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT