தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ல் இடைத்தேர்தல்!

DIN

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியுடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலத்திற்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT