தமிழ்நாடு

கழிப்பிடம் கட்டித் தாருங்கள்! மலைக்குறவர் பெண்கள் கோரிக்கை!!

தம்மம்பட்டியில் பொதுக் கழிப்பிடம் கேட்டு, மலைக்குறவர் சமுதாய பெண்கள் பேரூராட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் பொதுக் கழிப்பிடம் கேட்டு, மலைக்குறவர் சமுதாய பெண்கள் பேரூராட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி 6 ஆவது வார்டில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரே பகுதியில் வசிக்கின்றன.

இப்பகுதியில், நீண்ட காலமாக பொதுக் கழிப்பிடம் இல்லாததால், அங்கு வசிக்கும் பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி தங்கள் பகுதிக்கு பொதுக்கழிப்பிடம் கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் பகுதிக்கு, பேரூராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சித் தலைவர் கவிதா வி.பி.ஆர்.ராஜாவிடம், மலைக்குறவர் பெண்கள் திராளகச் சென்று கோரிக்கை விடுத்தனர். அப்போது திமுக நகரச் செயலாளர் வி.பி.ஆர்.ராஜா உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT