மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!
நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,108 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று(வியாழக்கிழமை) காலை வினாடிக்கு 1,022 கன அடியாகக் குறைந்துள்ளது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,108 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று(வியாழக்கிழமை) காலை வினாடிக்கு 1,022 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசனத் தேவை குறைந்ததால் பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 108.94 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.37 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 76.11 டி.எம்.சியாக உள்ளது.