தமிழ்நாடு

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வடிவேலுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

DIN

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வடிவேலுவுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று(புதன்கிழமை) இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், வடிவேலுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் வடிவேலுவை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், 'நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகுபார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' வடிவேலு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT