தமிழ்நாடு

நீட் விலக்கு: மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்!

DIN

நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்தாண்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு அனுப்பினார்.

நீட் விலக்கு மசோதா குறித்து கடந்த ஆண்டே மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தமிழக மருத்துவத்துறையும் மத்திய அமைச்சகத்திற்கு பதில் அளித்திருந்தது.

இந்நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் தமிழக மருத்துவத்துறைக்கு நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு வாரங்களில் தமிழக அரசுத் தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT