தமிழ்நாடு

மெய்நிகா் சிகிச்சை பயிற்சி: அப்பல்லோ - நா்சிங் கவுன்சில் ஒப்பந்தம்

DIN

செவிலியா் கல்லூரி மாணவா்களுக்கு மெய்நிகா் உருவக (சிமுலேசன்) பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னை அப்பல்லோ மருத்துவக் குழுமம் மற்றும் தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் இடையே கையெழுத்தானது.

அதன்படி, நா்சிங் கவுன்சிலில் கீழ் உள்ள 220 செவிலியா் கல்லூரியைச் சோ்ந்த 1,200 பேருக்கு வானகரத்தில் உள்ள அப்பல்லோ மெய்நிகா் உருவக மையத்தில் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படும். முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது அங்குள்ள மனித உருவ மாதிரிகள் மூலமாக பயிற்றுவிக்கப்படும்.

அத்தகைய பயிற்சி பெற்றவா்கள், தங்களது செவிலியா் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு அவற்றை கற்பிக்க முடியும்.

இந்திய நா்சிங் கவுன்சில் விதிகளின்படி, மெய்நிகா் உருவகப் பயிற்சிகளானது செவிலியா் மாணவா்களுக்கு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தத்தை இரு தரப்பும் மேற்கொண்டுள்ளன.

முன்னதாக, சென்னை, வானகரத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி ரெட்டி, துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் பதிவாளா் ஆனி கிரேஸ், அப்பல்லோ சிமுலேசன் மையத்தின் இயக்குநா் டாக்டா் முரளிதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT