முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? - இன்றைய கூட்டத்தில் முடிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவு என்ன என்பது குறித்து கடலூரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
அண்ணாமலை
பகிர்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவு குறித்து கடலூரில் இன்று நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அரசியலில் சூழலைக் கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கடலூரில் இன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறது.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →