தமிழ்நாடு

சென்னை திருமங்கலத்தில் தீ விபத்து!

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் சுரங்கப்பாதை பின்புறம் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் சுரங்கப்பாதை பின்புறம் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

குடியிருப்பின் தரைதலத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் பற்றிய தீ அங்குள்ள மின்மாற்றியில் பற்றிக் கொண்டதால் வேகமாக பரவி அருகே உள்ள இருசக்கர வாகனம் தீயில் கருகியது.

மேலும் தீ விபத்து நடந்தபோது அப்பகுதியில் இருந்த வயதான மூதாட்டி தீயணைப்பு துறையினரால் எவ்வித தீக்காயமும் இன்றி  காப்பாற்றப்பட்டார். 

உடனடியாக குடியிருப்பு வாசிகள் அருகே உள்ள அண்ணாநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT