தமிழ்நாடு

ஓராண்டில் 5வது முறையாக தனியார் பால்விலை உயர்வு.. லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் ஓராண்டில் ஐந்தாவது முறையாக ஐந்து தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன.

DIN

தமிழ்நாட்டில் ஓராண்டில் ஐந்தாவது முறையாக ஐந்து தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. சராசரியாக 70 நாள்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2 வரை விலையை உயர்த்தி உள்ளது.

விலையேற்றத்தை அடுத்து, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.48 இல் இருந்து ரூ.50 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 இல் இருந்து ரூ.52 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால்  லிட்டர் ஒன்றுக்கு ரூ.62 இல் இருந்து ரூ.64 ஆகவும், நிறைகொழுப்பு பால் லிட்டருக்கு ரூ.70 இல் இருந்து ரூ. 72 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோல் தயிர் ரூ.72 இல் இருந்து ரூ.74 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை (ஜன.20) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT