தங்கம் விலை குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சற்று குறைந்து 42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சற்று குறைந்து 42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 9-ம் தேதி 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில், ஜன.21ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,320ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.74.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.200 குறைந்து ரூ.74,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.