தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 755 கன அடியாகக் குறைந்தது!

DIN

மேட்டூர் அணை நீர்வரத்து 755 கன அடியாகக் குறைந்தது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 755 கன அடியாகக் குறைந்தது. .

கடும் வறட்சி காலங்களில் மட்டுமே மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,000 கன அடிக்கு கீழே சரியும். ஆனால் நடப்பு ஆண்டில் இன்று மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டாம் நாளாக 1,000 கன அடிக்கு கீழே சரிந்துள்ளது. 

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 883 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 755 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா  பாசனத்திற்கு  வினாடிக்கு 10,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 107.79 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.20 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 74.48 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக்கு ஆஜராக ஏழு நாள்கள் அவகாசம் வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணா

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT