சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,584 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக உள்ளது.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 5,000 -ஐ தாண்டிய நிலையில் டிச. 14ல் ரூ. 5,100-யைத் தாண்டி வரலாற்றின் புதிய உச்சத்தை எட்டியது. ஜனவரி 9-ஆம் தேதி 42 ஆயிரத்தைத் தாண்டியது.
கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. திங்கள்கிழமை (ஜன.23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்ந்து ரூ. 42,584 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 5 உயர்ந்து ரூ. 5,323 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.74.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74 ஆயிரத்து 700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரிப்பதால், ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது தங்க முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பாக இருந்தாலும் நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையும் அளிக்கக் கூடியதாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.