முகப்பு
தமிழ்நாடு

இயற்கை நீர்வழித்தடத்தில் செயற்கை அருவியா? ஆய்வு செய்ய உத்தரவு

அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:47 PM
பகிர்:

அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ஏராளமான தனியார் விடுதிகள் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டிருந்தார். 

அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

வணிக நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்ட சொகுசு விடுதி உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் எனவும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.