முகப்பு
தமிழ்நாடு

திண்டுக்கல்லில் ஜன. 27-ல் உள்ளூர் விடுமுறை!

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஜனவரி 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 24 ஜனவரி, 2023 at 9:54 PM
ஒளிரும் பழனி முருகன் கோயில்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:22 PM


பழனி முருகன் கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஜனவரி 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஜனவரி 27ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. 

இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

இதனால், வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். 

விடுமுறையால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் வெள்ளிக்கிழமை இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 25ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.