தமிழ்நாடு

ஈரோடு, தருமபுரி, தூத்துக்குடிக்கு ஜியோ 5ஜி சேவை!

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தனது நெட்வொர்க்கின் கீழ் 11 நகரங்களை இணைப்பதன் மூலம் அதன் 5G கவரேஜை தமிழ்நாட்டில் விரிவுபடுத்தியுள்ளது.

DIN

சென்னை: இந்தியாவில் 5ஜி சேவைகளை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இன்று ஒரே நாளில் 17 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகளை தொடங்கியது.

தமிழகத்தில் தூத்துக்குடி, ஈரோடு மற்றும் தருமபுரி உள்ளிட்ட மூன்று நகரங்களும் இதில் அடங்கும். இதன் மூலம் 184 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் இதுவரை ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை பெறுகின்றனர்.

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

5ஜி சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டாவை 1 ஜிபிபிஎஸ் பிளஸ் வேகத்தில் அனுபவிக்க கூடுதல் கட்டணமின்றி இன்று முதல் வழங்கப்படுகிறது.

இந்த புத்தாண்டில் அனைத்து ஜியோ பயனரும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், 5ஜி சேவைகள் வழங்குவதை விரைவு படுத்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திற்குள், இந்தியா முழுவதும் 5ஜி சேவைகள் விரிவுபடுத்தப்படும். ஜியோவின் சேவைகளை விரிவுபடுத்த உறுதுணையாக இருந்த ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நன்றி என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT