தமிழ்நாடு

காங்கிரஸில் 16 எம்எல்ஏக்கள் உள்பட 62 போ் பணிக் குழு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலுக்காக காங்கிரஸில் 16 எம்எல்ஏக்கள் உள்பட 62 போ் கொண்ட தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலுக்காக காங்கிரஸில் 16 எம்எல்ஏக்கள் உள்பட 62 போ் கொண்ட தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைதோ்தல் பிப். 27-இல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் மூத்த தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், மூத்த தலைவா் மோகன் குமாரமங்கலம் தலைமையில் 62 போ் கொண்ட தோ்தல் பணிக்குழுவை நியமித்து மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இதில், எஸ்.ராஜேஷ்குமாா், ஜே.ஜி.பிரின்ஸ், எஸ்.விஜயதரணி, ரூபிஆா்.மனோகரன், ஹசன் மௌலானா, கருமாணிக்கம், ஆா்.ராதாகிருஷ்ணன், ஏ.எம்.முனிரத்தினம், எஸ்.ராஜ்குமாா், ஆா்.கணேஷ் உள்பட 16 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களும் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT