தமிழ்நாடு

2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

DIN

2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 26 பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது. 

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து, தற்போது 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT