குடியரசுத் தலைவர் மாளிகை 
தமிழ்நாடு

குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்: 3 தமிழக காவலர்கள் தேர்வு!

குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்திற்கு தமிழகத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

DIN

குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்திற்கு தமிழகத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தில்லி செங்கோட்டையில் 74-வது குடியரசு தினவிழா நாளை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த விழாவில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் விருது வழங்கப்படும். இந்தாண்டிற்கான விருதுபெறும் காவலர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

சிறந்த சேவைக்கான குடியரசு காவல் பதக்கத்திற்கு 93 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தை சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் பொன்ராமு, அரியலூர் உதவி கண்காணிப்பாளர் ரவி சேகரன் ஆகியோர் நாளை குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் பெறவுள்ளனர்.

அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவலர்கள் பதக்கத்திற்கு தமிழகத்திலிருந்து 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT