முகப்பு
தமிழ்நாடு

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் புதன்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அனுமதித்தனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் புதன்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அனுமதித்தனர்.

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்றது கம்பம் அருகே உள்ள சுருளி அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்ததால் அருவியில் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் அதிகப்படியான நீர் வரத்து ஏற்படுவதைக்கண்ட புலிகள் காப்பகத்தினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க தடை விதித்தனர்.

இந்நிலையில் அருவியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனை கண்காணித்த புலிகள் காப்பகத்தினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு குளிக்க அனுமதியளித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இதுபற்றி வனச்சரகர் வி.பிச்சைமணி கூறும்போது, மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதனால் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்தது. அதன் பேரில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டது. வன ஊழியர்கள் பாதுகாப்பு செய்து வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.