சமூகத் தீமைகளை ஒழிக்க உறுதியேற்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சமூகத் தீமைகளை ஒழிக்க உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
சமூகத் தீமைகளை ஒழிக்க உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
குடியரசு தினத்தையொட்டி, அவா் தனது ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
இந்தியாவின் 74-ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், உலகின் மாபெரும் மக்களாட்சியாக நமக்கு மரியாதையைப் பெற்றுத் தந்துள்ள மாண்புகளைக் காப்போம். வேற்றுமைகளும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும்தான் இந்தியாவின் மிகப் பெரும் வலிமைகள். அவற்றைப் போற்றவும், நம்மைப் பிரிக்க முனையும் சமூகத் தீமைகளை ஒழிக்கவும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement