தமிழ்நாடு

என்எல்சி நிறுவனப் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?

DIN

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது. 


கண்ணபிரான் என்ற நபர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அடுத்த நான்கு ஆண்டுகளில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் எனக் கேட்டிருந்தார்.

அவரது இந்த கேள்விக்கு தற்போது பதில் தரப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ளனர் எனப் பதில் தரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காலியாகும் பணியிடங்கள் வட மாநிலத்தவர்களுக்கு சென்று விடுமோ என்ற அச்சம் கடலூர் பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது. மேலும், அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ளதால் அந்தப் பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தற்போது 11,110 பேர் நிரந்தரமாக பணியாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT