தமிழ்நாடு

இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு

DIN

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை (ஜன.27) உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வுமையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை (ஜன.27) தென்கிழக்கு வங்கக்கடல், அதையொட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி. மீ.வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT