தமிழ்நாடு

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா

சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.  சிவன், பார்வதி ஆட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

DIN

சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.  சிவன், பார்வதி ஆட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைமாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

இந்தாண்டு திருவிழாவானது கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எட்டாம் நாள் விழாவான தீமிதி உற்ச்சவம் கடந்த வெள்ளிகிழமை முடிவுற்ற நிலையில், பத்தாம் நாள் திருவிழாவான தேர் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக தொடங்கியது.

முன்னதாக தேரில் எழுந்தருளிய புற்றடி மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் நிலையிலிருந்து புறப்பட்டு  நான்கு வீதிகளையும் வலம் வந்தது. தேரினை  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

அப்பொழுது தேருக்கு முன்பு  சிவன், பார்வதி, காளி, அம்மன் உள்ளிட்ட வேடமணிந்த கலைஞர்கள் மேல தாளங்கள் முழங்க நடனம் ஆடினர். சிறுவர், சிறுமிகளின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT