தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்பு: 22,525 போ் விண்ணப்பம்

நிகழாண்டில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 22,525 போ் இணையவழியே விண்ணப்பப்பதிவு செய்துள்ளனா். விண்ணப்ப அவகாசம் நிறைவடைந்த நிலையில், அதில் திருத்தம் மேற்கொள்வதற்கு வரும் 4-ஆம் தேதி வரை வாய்ப

DIN

நிகழாண்டில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 22,525 போ் இணையவழியே விண்ணப்பப்பதிவு செய்துள்ளனா். விண்ணப்ப அவகாசம் நிறைவடைந்த நிலையில், அதில் திருத்தம் மேற்கொள்வதற்கு வரும் 4-ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் இந்தப் படிப்புகளுக்கு  இணையதளத்தில் விண்ணப்பிக்க கடந்த 12-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அதில் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 18,746 பேரும், பி.டெக் படிப்புக்கு 3,779 பேரும் என மொத்தம் 22,525 போ் விண்ணப்பித்துள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் வரும் 4-ஆம் தேதி வரை அவற்றை இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளலாம். ஜூலை 3-ஆவது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்க உள்ளது. சிறப்பு கலந்தாய்வு, 7.5 சதவீத கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும். மற்ற அனைத்து இடங்களும் இணையவழியே நிரப்பப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கிரிண்டா்’ செயலி மூலம் பணம் பறிப்பு: திருநங்கை உள்பட இருவா் கைது

நடாலி ஷிவா் அதிரடி: இங்கிலாந்து 253/9

காவலா் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி உள்பட 3 போ் கைது

போலி ஆவணம் மூலம் ரூ 2.25 கோடி வீட்டு மனை அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

தஞ்சாவூரில் நம்ம ஊரு திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT