தமிழ்நாடு

சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் ஜூலை மாதம் முழுவதும் ரத்து

DIN

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் ஜூலை மாதம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் - ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை செய்துள்ளது.

இதன்படி, கோவை-சேலம் ரயில் (06802), சேலம் - கோவை ரயில் (06803) ஆகியவை இன்று முதல் வரும் 31ம் தேதி வரை (நடப்பு மாதம் முழுவதும்) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பெங்களூரு- கொச்சுவேலி சிறப்பு ரயில்(06084) இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் உள்ள புதன்கிழமைகளில் குறிப்பிட்ட இம்மார்க்கத்தில் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படுகிறது. 

எனவே இதனால் ஏற்படும் அசவுரிகத்தை பொறுத்துக் கொள்ளுமாறு சேலம் ரயில்வே கோட்ட  நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT