தண்டவாளத்தில் தற்படம் எடுத்தபோது ரயிலில் அடிபட்டு 2 பேர் பலி
திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் தற்படம் எடுத்த இரு தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.
திருப்பூர்: திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் தற்படம் எடுத்த இரு தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பி.பாண்டின் (23), இவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்தவர் எம்.விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.
இதையும் படிக்க | ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றறை வயது குழந்தையின் வலது கை பாதிப்பு: மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியம்?
Advertisement
Advertisement
இந்தநிலையில், விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ரயில் தண்டவளாத்தில் நின்று கைபேசியில் தற்படம் எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரயில்வே காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.