தமிழ்நாடு

சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில்! ஜூலை 7ல் தொடக்கிவைப்பு?

DIN

சென்னை- திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை வருகிற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த 2018ல் தயாரிக்கப்பட்டு 2019ல் தில்லி - வாராணசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை - மைசூரு, சென்னை - கோயம்புத்தூர் இடையே என இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அடுத்ததாக சென்னை- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயிலை வருகிற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் தமிழ்நாட்டில் நான்காவதாக சென்னை- நெல்லை இடையே ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT