முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும் ஒருபோதும் மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, மீறினால் காவிரி ஆணையத்திடம் சென்று முறையிடுவோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட அரசு அலுவலர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT