கோவில் அறங்காவலர் குழுவில் புறக்கணிப்பு: பொதுமக்கள் போராட்டம்!
அறங்காவலர் குழுவில் இரு கிராமத்தினர் புறக்கணிப் நடந்ததாகக் கூறி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு பட்டியலில் சன்னை மிராசை சேர்ந்த இரு கிராமங்களை புறக்கனித்ததாக குற்றம் சாட்டி, கோவில் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அறங்காவலர் குழு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது.
இந்த குழுவில் கோவில் தேர் சன்னை மிராசுகளான ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் ஆகிய இரு கிராமத்தினரை புறக்கணித்ததைக் கண்டித்தும், அந்த அரசாணையை ரத்து செய்து, கடந்த 45 ஆண்டுகளாக அறங்காவலர் குழுவில் இடம் பெற்று வந்த தங்கள் கிராமத்தினரை குழுவில் இணைத்து அரசாணை வெளியிட வலியுறுத்தியும் இரு கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதனால் அவிநாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.