கோப்புப் படம் 
தமிழ்நாடு

7 ரயில்களில் குளிர்சாதன வசதியுடைய பெட்டிகள் அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் 7 விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதியுடைய பெட்டிகளை தெற்கு ரயில்வே கூடுதலாக இணைத்துள்ளது.

DIN

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் 7 விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதியுடைய பெட்டிகளை தெற்கு ரயில்வே கூடுதலாக இணைத்துள்ளது.

கூடுதலாக இணைக்கப்படும் குளிர்சாதன வசதியுடைய பெட்டிகளுக்கு பதிலாக ரயில்களில் உள்ள முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மன்னார்குடி - ராஜஸ்தான் ரயிலில் குறைக்கப்பட்ட 2ஆம் வகுப்பு பெட்டிகளுக்கு பதில் 4 (ஏ.சி.) குளிர்சாதன வசதியுடைய பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் - ஒகா ரயிலில் ஆறு 3ஆம் வகுப்பு பெட்டிகளுக்கு பதிலாக குளிர்சாதன வசதியுடைய பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

மங்களூரு - சென்ட்ரல் - லோக்மானிய திலக் ரயிலில் கூடுதலாக ஒரு 3ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி இணைக்கப்படுகிறது.

கோவை - ராஜ்காட் ரயிலில் நான்கு 3ஆம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

கோவை - ராமேஸ்வரம் ரயிலில் நான்கு 3ஆம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய பெட்டிகள் இணைக்கப்படும். 

சென்னை எழும்பூர் - ஜோத்பூர் ரயிலில் ஆறு 3ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. 

சென்னை - நாகர்கோவில் விரைவு ரயிலில் ஆறு 3ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

ரயில் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இம்மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் தொடக்கத்தில் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டு வெடிப்பு! ஷாஹீன், முஸாமில் ரொக்கம் கொடுத்து புதிய கார் வாங்கியது ஏன்?

உ.பி. கல்குவாரி விபத்து: 3வது நாளாக மீட்புப்பணி தீவிரம்!

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

பாலய்யாவின் 111 ஆவது படத்தில் இணைந்தார் நயன்தாரா!

“பெங்களூருவை விட்டு வெளியேறுங்கள்”... ரூ. 50 கோடி வரையிலான சலுகைகளுடன்.!

SCROLL FOR NEXT