கும்பகோணம்: வார இறுதியில் 300 சிறப்புப் பேருந்துகள்!
தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ஆம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக கும்பகோண கோட்டம் அறிவித்துள்ளது.
தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
வரும் 9ஆம் தேதி அதிக அளவு திருமணங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதனால், பொதுமக்கள் வசதிக்காக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Advertisement
இதேபோன்று, திருச்சியிலிருந்து கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.