தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

DIN

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 22 பேரை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி மீன்பிடிக்க சென்றபோது ஒரு விசைப்படகு, தேவா, நடராஜன், நாகராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்கள், மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஒரே நாளில் நான்கு விசைப்படகுகள் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று புதன்கிழமை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்யப்படாது என எச்சரித்து 22 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

இருப்பினும், அவர்களின் 4 படகுகளையும் விடுவிக்க மறுத்துவிட்டனர்.

இதனைதொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட 22 மீனவர்களும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரிரு நாள்களில் நாடு திரும்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT