ஆரஞ்சு நிற பால் பாக்கெட்: ஆவின் நிா்வாகம் கட்டுப்பாடு
ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் அதிகளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதையடுத்து அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஆவின் நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதைத்தொடா்ந்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளா்கள் குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை ஆவின் நிறுவனத்தில் கொடுத்த பிறகே தங்களுடையை மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க முடியும்.
Advertisement
Advertisement
மேலும், ஒரு குடும்ப அட்டைக்கு தினமும் ஒரு லிட்டா் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.