திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் குடமுழுக்கு 
தமிழ்நாடு

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் குடமுழுக்கு

மிகவும் பழைமையான பிரகன்நாயகி உடனுறை அருணஜடேஸ்வரர் ஆலயக்  குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

DIN

தஞ்சாவூர்: மிகவும் பழைமையான பிரகன்நாயகி உடனுறை அருணஜடேஸ்வரர் ஆலயக்  குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பிரகன்நாயகி உடனுறை அருணஜடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமை ஆதினதிற்கு சொந்தமான இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி மன்னியாற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு சிறப்பு  பூஜையில் நடைபெற்றது. 

கடந்த 3ஆம்  தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இந்த யாகசாலை பூஜையில் 59 குண்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில் இன்று காலை எட்டாம் கால பூஜைகள் நிறைவு பெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வாண வேடிகையுடன் நான்கு இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த குடமுழுக்கு விழாவில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞான மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமட அதிபர் எஜமான் சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம், வேளக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம் மதுரை ஆதீனம், நெல்லை உமையுருபாக ஆகிய ஆதீனங்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT