தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

DIN

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் பராமரிப்பு பணி காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் முதல் பிரிவில் 1-வது அலகில் பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் முதல் பிரிவில் மூன்று அலகுகளில் 630 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு முழு உற்பத்தி துவங்கும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

மண் அல்ல, பொன்!

SCROLL FOR NEXT