ராகுல் காந்தி பதவி பறிப்பு வழக்கு: நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
ராகுல் காந்தி பதவி பறிப்பு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்: ராகுல் காந்தி பதவி பறிப்பு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதிவு பறிப்பு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றண், சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதந்மூலம் ராகுகாந்தி பதவி பறிப்பையும், பழிவாங்கும் போக்கில் செயல்படும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் பாசிச, ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 30க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை ரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.