தமிழ்நாடு

மாமன்னன் திரைப்படம் 9 நாட்களில் இவ்வளவு வசூலா?

மாமன்னன் திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்திருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

DIN

மாமன்னன் திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்திருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் மாமன்னன் வசூலில் குறைவைக்கவில்லை. 

படம் வெளியான முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்திருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற மாமன்னன் படத்தின் நன்றி தெரிக்கும் விழாவில் உதயநிதி பேசியதாவது, மாமன்னன் திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளது. 

படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலுதான். வடிவேலு நடிக்க ஒத்துக்கலனா இந்த படம் வேண்டாம். வேற படம் ஏதாவது பண்ணலாம்னு மாரி செல்வராஜ் கிட்ட சொன்னேன். ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல், சஞ்சு சாம்சன்!

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

SCROLL FOR NEXT