வேங்கைவயல் 
தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி மனு!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கோரி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்துள்ளது.

DIN

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கோரி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் குடியிருப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன், சந்தேகப்படும்படியாக உள்ளோரின் மரபணுவை ஒப்பிட்டுப் பார்க்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி, நீதிமன்ற அனுமதி பெற்று இதுவரை 21 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்துவதற்காக ரத்த மாதிரிகளை சிபிசிஐடி போலீசார் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மேலும் 4 சிறுவர்களுக்கு மரபணு பரிசோதனை செய்வதற்காக ரத்த மாதிரிகளை பெற அனுமதிக்கக் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் தூக்கிட்டு தற்கொலை

கடல் அலையில் சிக்கி மாயமான மாணவா் சடலமாக மீட்பு

உத்தர பிரதேச முதல்வா் ‘ஊடுருவல்காரா்’..! அகிலேஷ் யாதவ் பேச்சால் பரபரப்பு!

தில்லி அரை மராத்தான்: பெண்களின் பங்கேற்பு அதிகரிப்புக்கு முதல்வா் ரேகா குப்தா பாராட்டு!

500 மில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஏலத்திற்கு அழைப்பு!

SCROLL FOR NEXT