தமிழ்நாடு

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து! இரு இளைஞர்கள் பலி!!

செய்யாறு அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், படுகாயம் அடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

DIN

செய்யாறு: செய்யாறு அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், படுகாயம் அடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் மாமண்டூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் முத்து (23). இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர்,  திங்கள்கிழமை மாலை நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அப்துல்லாபுரம் - வெம்பாக்கம் சாலையில் வடமாவந்தல் கூட்டுச் சாலை அருகே  சென்றுக் கொண்டு இருந்தார்.

அதேப்போல் சித்தாத்தூர் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்றுக் கொண்டு இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராகவன் (23) என்பவர் ஒட்டி வந்த பைக்கையும்,  முத்து ஒட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயங்களுடன் இருந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த விபத்துக் குறித்து இறந்தவரின் அண்ணன் மாமண்டூர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

SCROLL FOR NEXT