முகப்பு
தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத் துறை வசமான விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை!

விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள வள்ளலார் அருள்மாளிகையை நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத் துறையினர் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:18 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள வள்ளலார் அருள்மாளிகையை நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத் துறையினர் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தினர்.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அறக்கட்டளை சார்பில் வள்ளலார் அருள் மாளிகை இயங்கி வருகிறது. இதை அண்ணாமலை உள்ளிட்டோர் நிர்வகித்து வந்தனர்.

இந்த நிலையில் இங்கு முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீனிவாசன் என்பவர் கடந்த 2016-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அண்ணாமலை முறையீடு செய்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் மூலம் தக்காரை நியமித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. தொடர்ந்து, அண்ணாமலைக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 3 - ஆம் தேதி வள்ளலார் அருள் மாளிகையை கையகப்படுத்துவதற்கான உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் வள்ளலார் அருள் மாளிகைக்குச் சென்றனர். அந்த மாளிகை பூட்டப்பட்டிருந்தால், அதை உடைத்து, உள்ளே நுழைந்து கையகப்படுத்தினார். 

இதற்கான தக்காராக பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் செயல் அலுவலரான மதனா நியமிக்கப்பட்டு, அவர் வள்ளலார் மாளிகையை கையகப்படுத்தினா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.