தமிழ்நாடு

போக்குவரத்து விதிமீறல்: நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம்!

நடிகர் விஜய் சென்ற கார் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

DIN

சென்னை: நடிகர் விஜய் சென்ற கார் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடிகர் விஜய் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று பிற்பகல் காரில் புறப்பட்டார். அப்போது அக்கறை சந்திப்பில் உள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த நிலையில், விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றது. இந்த விடியோ இணையத்தில் வேகமாக பரவி விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, சிக்னலை மீறிய குற்றத்துக்காக ரூ. 500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நடிகர் விஜய்க்கு ரசீது அனுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே, காரில் கருப்புக் கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடம்புரண்ட திரைக்கதை!

கரூர் பலி 41-ஆக உயர்வு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை!

தைரியம் கூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

மாவட்ட மைய நூலகத்தில் சிறுவா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT