கோப்புப் படம் 
தமிழ்நாடு

நவ. 10 - தெற்கே  செல்லும் ரயில்களில் தீபாவளி முன்பதிவு முடிந்தது!

தீபாவளி பண்டிகைக்கான நவம்பர் 10-ஆம் தேதி ரயில்களின் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.

DIN

தீபாவளி பண்டிகைக்கான நவம்பர் 10-ஆம் தேதி ரயில்களின் பயணச்சீட்டு முன்பதிவு, தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.

நிகழாண்டு நவ.12 -ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. 
இதையொட்டி நவ.9 -ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு கவுன்ட்டா், இணைய வழியில் நேற்று தொடங்கிய 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

இந்நிலையில், நவ.10-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், சில நொடிகளிலேயே விற்று, காத்திருப்பு பட்டியலுக்கு வந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான ரயில்களில் பயணச்சீட்டு தீர்ந்தது.

ரயில் நிலையங்களில் அதிகாலை 3 மணிமுதல் வரிசையில் காத்திருந்த பலருக்கு பயணச்சீட்டு கிடைக்காததால் அவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 11-ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை காலை தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT