தமிழ்நாடு

தமிழகத்தில் 7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் சாா்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

ஜூலை 17 முதல் 23 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்களுக்கு..

ஜூலை 15 - தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்கள் இந்த நாளில் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்எஸ்இ பொதுப்பங்கு வெளியீட்டுக்கான தடையின்மைச் சான்று இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: செபி தலைவர்!

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மூன்றாம் பாலினத்தவருக்கான வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: ஆட்சியா் தகவல்

திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 2.47 லட்சம் போ் பயணம்!

SCROLL FOR NEXT